Latestமலேசியா

பூனையை கொன்று தோலை உரித்த நபரை பற்றிய தகவல் தருவோருக்கு 3,000 ரிங்கிட் வெகுமதி

கோலாலம்பூர், ஜூன் 25 – பூனையை கொன்று அதன் தோலை உரித்த மியன்மார் ஆடவர் என நம்பப்படும் ஒருவரின் செயல் சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த நபர் குறித்த தகவலை தருவோருக்கு MAA எனப்படும் வளர்ப்புப் பிராணிகளுக்கான மலேசிய சங்கம் 3,000 ரிங்கிட் வெகுமதி வழங்க முன்வந்துள்ளது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள ஆடவன் மலாய் மொழியில் உரையாற்றுவதன் அடிப்படையில் இச்சம்பவம் இந்நாட்டில் நடந்ததாக சந்தேகிக்கப்படுவதாக மலேசிய வளர்ப்புப் பிராணிகள் சங்கத்தின் தலைவர் Ari Dwi Andika தெரிவித்தார். வளர்ப்புப் பிராணியான அந்த பூனை உணவுக்காக அல்லது சுய விருப்பத்தின் நோக்கத்தில் கொல்லப்பட்டதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

சமூக வலைத்தளத்தில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்த பூனை வேண்டுமென்றே கொல்லப்பட்டது என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால் ஈவு இரக்கமற்ற செயலை மேற்கொண்ட அந்த நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தி அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட வேண்டும். மேலும் உண்பதற்காக பூனையை கொல்லும் நோக்கம் மலேசிய மக்களின் கலச்சாரம் இல்லை என்பதால் அந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என Ari Dwi Andika வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினார். அதோடு அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஆடவர் குறித்த தகவலை தங்களது இயக்கத்திற்கு 014 – 6345464 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!