
தும்பாட், மே-8-தும்பாட், பாசார் பெசார் வாக்காப் பாருவில் உள்ள சலவை நிலையத்தின் முன்பக்கக் கண்ணாடி கதவை, ஒரு பெண் ஓட்டி வந்த ஹோண்டா சிட்டி கார் மோதி உடைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மதியம் மணி 12.40 அளவில் ஏற்பட்ட அந்த சம்பவம் குறித்து சலவை நிலையத்தின் உரிமையாளரான 32 வயதுடைய நபரிடமிருந்து தகவல் கிடைத்ததாக தும்பாட் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் கைரி ஷாபி தெரிவித்தார்.
50 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், Jalan Puteri Saadong-கிலிருந்து அந்த நிலையத்தை நோக்கி காரை ஓட்டி வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததும், ஓட்டுநர் திரும்பியபோது அவர் தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் அக்கார் அதிவேகமாகச் சென்று, சலவை நிலையத்தின் முன்பக்கக் கண்ணாடிக் கதவில் மோதியது.
இச்சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை என்றாலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முகமட் கைரி ஷாபி கூறினார்.



