பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் முதலைத் தாக்குதல்; ஆடவர் படுகாயம்

தெலுக் இந்தான், டிசம்பர்-2,
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஆற்றங்கரையில் இருந்த ஓர் ஆடவரை, திடீரென ஒரு பெரிய முதலைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.
சனிக்கிழமை மாலை Kampung Sungai Buaya-வில் உள்ள தனது தோட்டத்தில் வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வாடவரை முதலைத் தாக்கியது.
இடது கால் முட்டிக்குக் கீழ் இரத்தக் காயங்களுடன் அந்நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்; அவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
அப்பகுதியில் வெள்ளநீர் இன்னும் வற்றாத நிலையில், வெள்ளப் பெருக்கு முதலைகளை குடியிருப்புப் பகுதிகளுக்கு தள்ளியிருக்கலாம் என்று PERHILITAN வனவிலங்கு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, அருகிலுள்ள கிராமங்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆற்றங்கரை, தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள் அருகே பொது மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



