
பேராக், Hutan Melintangங்கில் Kampung Baru, Sungai Sumun எனுமிடத்தில் வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயது சிறுவன், செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டான். அச்சிறுவனுக்கு autism எனும் மதியிறுக்க பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அச்சிறுவனின் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று தேடலில் ஈடுபட்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு உதவி இயக்குனர் Sabarodzi Nor Ahmah தெரிவித்தார்.
இரவு பத்து மணியளவில் அச்சிறுவனின் சடலம் வீட்டின் அருகில் இருந்த செம்பனைத் தோட்ட வடிகாலில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். அச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.



