தாப்பா, ஏப் 3 – மலேசியாவில் முதல் முறையாக பேரா மாநிலத்தில் 2.3 டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. Kampung Ladang Bikam கில் 0.6 ஹெக்டர் நிலத்தில் வெங்காயம் பயிரிடும் திட்டத்தின் கீழ் அந்த உற்பத்தி கிடைத்துள்ளது. மாநில விவசாயத்துறையின் ஒத்துழைப்போடு ஒரு ஹெக்டர் நிலத்தில் மூன்று கட்டங்களாக வெங்காய உற்பத்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் ஒரு ஹெக்டரில் நான்கு டன் வெங்காய விளைச்சலை பெறமுடியும் என விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத துணையமைச்சர் டத்தோ Arthur Joseph Kurup தெரிவித்தார்.
முதல் கட்ட உற்பத்தியாக 2.3 டன் வெங்காயம் கிடைத்துள்ளது. அடுத்து இரண்டாவது மற்றும் முன்றாவது கட்ட திட்டங்களிலும் நல்ல உற்பத்தி கிடைக்கும் என அவர் கூறினார். வெங்காய உற்பத்தியில் முன்னோடி திட்டமாக திகழும் இதன் மூலம் நாடு வெங்காய இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பதை குறைக்க முடியும் என Arthur Joseph தெரிவித்தார்.