
ஜோர்ஜ் டவுன், ஏப்-15- பினாங்கு , ஆயர் ஈத்தாம் , ஜாலான் பவுண்ட்ரியில் உள்ள பொழுதுபோக்கு கிளப்பின் வாடிக்கையாளர் ஒருவர், நேற்று அங்கு நாற்காலியில் இருந்து தவறி விழுந்து மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் 65 வயதான உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டதாக பினாங்கு வடகிழக்கு மாவட்டத்தின் போலீஸ் துணைத் தலைவர் Superintendan Lee Swee Sake தெரிவித்தார்.
நேற்றிரவு மணி 7.10 அளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஆம்புலண்ஸ் வண்டியின் பணியாளர் இதனை உறுதிப்படுத்தினார்.
இறந்தவரின் உடலைப் பரிசோதித்ததில், சந்தேகத்திற்குரிய காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுகளும், அந்த ஆடவரின் மரணத்தில் எந்தக் குற்றச் செயல்களும் இல்லை என்பதைக் காட்டின.
மேலும் இன்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் முக்கிய இரத்த நாளம் வெடித்ததே அந்த நபரின் மரணத்திற்குக் காரணம் என்று தெரியவந்ததோடு அவரது இறப்பு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.



