சிரம்பான், ஏப் 16 -போர்ட் டிக்சன் கடல்நீரில் இருந்து எடுக்கப்படும் சிற்பிகள் உண்பதற்கு இன்னும் பாதுகாப்பானதாக இல்லை. தண்ணீரின் இரண்டாவது மாதிரியின் பகுப்பாய்வு முடிவுகள் பாதுகாப்பான உட்கொள்ளும் வரம்பிற்கு மேல் உயிரி நச்சுகள் இருப்பதை கண்டறிந்துள்ளது. கோலாலம்பூர் மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையம் போட்டிக்சன் நீர் பகுதியில் உள்ள சிற்பிகளில் மேற்கொண்ட இரண்டாவது பரிசோதனையில் அதில் இருக்கும் Biotoxine பாதுகாப்புக்கும் மீறி அளவுக்கு அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளது. இது முதல் மாதிரியை விட குறைவாக இருந்தாலும், பில்லியனுக்கு 800 பாகங்கள் (பிபிபி) என்ற விகிதத்தில் மனிதர்களுக்கு இன்னும் பாதுகாப்பாக இல்லையென நெகிரி செம்பிலான் மீன்பிடித்துறையின் இயக்குனர் Kassim Tawa தெரிவித்தார்,
போட்டிக்சன் கடல் பகுதியிலுள்ள சிற்பிகளை எடுத்து விற்பனை செய்வதற்கான தடையைத் தொடர வேண்டுமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பதை அடையாளம் காண எங்களுக்கு மூன்று சோதனைகள் தேவை. மூன்றாவது மாதிரி இன்று எடுக்கப்பட்டது மற்றும் முடிவுகள் இந்த வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படலாம் என அவர் கூறினார். எனவே இப்போதைக்கு, இப்பகுதியில் உள்ள சிப்பிகள் உட்கொள்வதற்கு இன்னும் பாதுகாப்பாக இல்லை, சில்லறை விற்பனையாளர்கள் அல்லது மீனவர்களால் அவற்றை விற்க தடை இன்னும் உள்ளது, என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.