Latestமலேசியா

போர்ட் டிக்சனில் மனைவியைச் சரமாரியாகத் தாக்கி ஆடவன்; நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்தான்

போர்டிக்சன், ஜூன்-25 – நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் ஹோட்டலில் வைத்து மனைவியைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஆடவர் மறுத்துள்ளார்.

போர்டிக்சன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 37 வயது மொஹமட் ரிட்வான் மாட் நாசிர் (Mohd Ridwan Mat Nasir), மே மாதம் 24-ங்காம் தேதி காலை அக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

2,500 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவரைப் பிணையில் விடுவித்த நீதிமன்றம், வழக்கு முடியும் வரை புகார்தாரருக்குத் தொல்லைக் கொடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தது.

வழக்கு ஜூலை 23-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வரும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் 352A பிரிவின் கீழ் அவருக்கு அதிகபட்சமாக 6 மாத சிறைத் தண்டனையும் இரண்டாயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

பிரசவத்திற்குப் பிறகு அண்மையில் தான் பத்தியம் முடிந்தவர் என்றும் பாராமல், மனைவியை அவ்வாடவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ முன்னதாக வைரலானது.

அதில் 38 வயது அப்பெண் கன்னத்தில் காயமடைந்து, உடம்பில் பல இடங்களில் வலிக்கும் ஆளானார்.

துரோகம் இழைத்ததாகக் கூறி கணவனிடம் அவர் நியாயம் கேட்கப் போன போது தாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!