Latestமலேசியா

லோக்கின் சீனப் பயணம்: நிர்வாக நடைமுறைகள், நெறிமுறைகள் குறித்து PAS கேள்வி!

கோலாலம்பூர், செப்- 23- பதவி விலகுவதாக அறிவித்திருந்த போக்குவரத்து அமைச்சர் Anthony Loke Siew Fook, சீனாவில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றிருப்பது குறித்து பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Fadhli Shaari கேள்வி எழுப்பியுள்ளார்.

Lokeக்கின் பதவி விலகல் இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை. எனவே சட்டரீதியாக Loke தொடர்ந்து அமைச்சராகவே கருதப்பட்டாலும், அவரது அந்நடவடிக்கை நிர்வாக நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்புவதாக அவர் கூறினார்.

கொள்கை அடிப்படையில் பதவியிலிருந்து விலகும் எண்ணம் கொண்டிருக்கும் அமைச்சர், தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர் உண்மையில் பதவியை விட்டு விலகத் தயாராகிறார் என்பதையே வெளிப்படுத்த வேண்டும் என்றும் Fadhli சுட்டிக் காட்டினார்.

அதோடு முக்கியமானதும் அவசரமற்றதுமான விவகாரங்களை அடுத்து பொறுப்பேற்கவிருப்பவரிடம் ஒப்படைத்து, அதிகார மாற்றத்தை முறையாக மேற்கொள்ளுமாறும் அவர் Lokeகைக் கேட்டுக் கொண்டார்.

Lokeக்கும் சீன போக்குவரத்து அமைச்சரும் தரை, ரயில், கடல், வான்வழிப் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு கூறியிருந்த நிலையில், Fadhli தமது அக்கருத்தை வெளியிட்டார்.

தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக முன்னதாக Loke அறிவித்திருந்தார். சீனாவில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை முடித்த பின் மலேசியா திரும்பி அது தொடர்பான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!