Latest
போலிவூட் நடிகை போல இருக்க மனைவிக்கு தினமும் 3 மணிநேர உடற்பயிற்சி, குறைவான உணவு வழங்கி கொடுமை – கணவர் மீது மனைவி போலிசில் புகார்

உத்தர பிரதேசம் – ஆகஸ்ட் 23 – உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், தனது கணவர் தன்னை பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியைப் போல தோற்றமளிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வற்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர திருமணத்திற்குப் பிறகு, கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினர் தன்னை இப்படி கடுமையாக துன்புறுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
புகாரில், தனது கணவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், உணவின் அளவை வெகுவாக குறைத்தாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மாமியார் கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொள்ள வற்புறுத்தியதால் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அறியப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.