மகாராஷ்டிரா, ஆகஸ்ட் 19 – இந்திய மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் சிமெண்டால் செய்யப்பட்ட போலி பூண்டு இருப்பதைக் காட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பூண்டு இந்தியர்களின் சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று.
இதன் விலை அவ்வப்போது ராக்கெட் உயரத்திற்கு அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில மர்ம நபர்கள், சிமெண்டால் பூண்டை போன்று செயற்கையாக உருவாக்கி அதனை சந்தையில் விற்று வருகின்றனர்.
இதனிடையே, அம்மாநிலத்தின் காவல் துறை பணியில் ஓய்வு பெற்றவரான சுபாஷ் பாட்டீலின் மனைவி தெருவோர வி்யாபாரி ஒருவரிடம் பூண்டு வாங்கி ஏமாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அந்த பூண்டு சிமெண்டை உரிக்க முயலும்போது, அதன் உள்ளே சிமெண்ட் இருப்பது வைரலாகும் அந்த காணொளியில் காணமுடிகிறது.
நாடு முழுவதும் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் காய்கறி சந்தைகளில் இது போன்ற போலி பூண்டு விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.