
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், கடந்த வாரம் மதுபோதை மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டி, மரண விபத்தை ஏற்படுத்தியதாக, தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மார்ச் 29-ஆம் தேதி Jalan Raya Barat-டில் , 33 வயது Amirul Hafiz Omar-ருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக, 28 வயது R. சக்தி கணபதி மீது, கிள்ளான் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், கொலைக் குற்றம் உயர் நீதிமன்றத்தின் கீழ் வருவதால், அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
ஒருவேளை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படலாம்; அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் 12-க்கும் குறையாத பிரம்படியும் விதிக்கப்பட வேண்டும்.
இவ்வேளையில், சம்பவத்தின் போது உடலில் போதைப்பொருளை செலுத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவ்வாடவர் எதிர்நோக்கியுள்ளார்.
அக்குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை.



