Latestமலேசியா

மலாக்கா பத்து பெரெண்டமில் 5ஆம் ஆண்டு மாணவன் பள்ளிக் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தான்

மலாக்கா, மே 7- மலாக்கா பத்து பெரெண்டமில் உள்ள ஒரு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், நேற்று பள்ளிக் கட்டிடத்தின் நடைபாதையில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படுவதை அடுத்து, மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டான்.

மற்றொரு மாணவன் கட்டிடத்தின் கூரையின் மீது வீசியெறிந்த தனது காலணிகளை எடுக்க முயன்றபோது, அந்த 11 வயது மாணவன் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டான்.

அனைத்து மாணவர்களும் பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த நண்பகல் நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மழைக்காலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதனால் தரையும் கூரையும் ஈரமாகி வழுக்கும் தன்மையுடையதாக மாறியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இருப்பினும், அந்த சிறுவனின் தற்போதைய நிலை இன்னும் தெரியவில்லை. இதனிடையே இச்சம்பவம் குறித்த அறிக்கை கிடைத்ததை மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் , உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பதிட் ( Christopher Patit ) உறுதிப்படுத்தினார். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!