மலாக்கா, ஏப்ரல்-15, மலாக்கா மாலிம் ஜயாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை TNB-யின் மின் துணை நிலையமொன்று தீப்பிடித்து எரிந்து, அதன் காணொலி வைரலாகியுள்ளது.
தீ கொளுந்து விட்டு எரிவது, வழிப்போக்கர் ஒருவர் பதிவுச் செய்த 3 வினாடி காணொலியில் தெரிகிறது.
அங்கு மாலை 5.16 மணிக்கு தீப்பிடித்ததை TNB-யின் அதிகாரப்பூர்வ facebook பக்கமான TNB Careline-னும் உறுதிச் செய்தது.
இருப்பினும் மாலை 5.40 மணிக்கெல்லாம் தீ அணைக்கப்பட்டு விட்டது.
சம்பவ இடம் நடமாடுவதற்குப் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்டதும், தீ ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறும் என்றும் TNB கூறியது.
அத்தீ சம்பவத்தால் எந்தவொரு பகுதியும் மின்சார விநியோகத் துண்டிப்புக்கு ஆளாகவில்லை.
மக்களுக்கான மின்சார விநியோகம் தங்குதடையின்றி கிடைப்பது எந்நேரமும் உறுதிச் செய்யப்படும் என்ற உத்தரவாதத்தையும் TNB வழங்கியது.