Latestமலேசியா

மலாக்கா முதல்வராக 2-வது முறையாகப் பதவியேற்றார் டத்தோ ஸ்ரீ அப் ரவூஃப் யூசோ

மலாக்கா, நவம்பர்-15,மலாக்கா மாநில முதல்வராக டத்தோ ஸ்ரீ அப் ரவூஃப் யூசோ இரண்டாவது தவணையாக இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார்.

ஆயர் குரோவில் உள்ள ஸ்ரீ நெகிரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மலாக்கா ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

பதவியேற்பு விழாவில் பாரிசான் நேஷனல் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடியும் கலந்துகொண்டார்.

நேற்று நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி 28 தொகுதிகளில் 24 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இத்தேர்தலில் பாரிசான் 21 இடங்களையும், பெரிக்காத்தான் கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றிய நிலையில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் DAP 4 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.

தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அப் ரவூஃப், கடந்த 2021 தேர்தலை விடப் பன்மடங்கு அதிகமாக 8,615 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றுள்ளார்.

65 வயது அப் ரவூஃப் யூசோ 2023-ஆம் ஆண்டு முதல் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!