Latestமலேசியா

மலேசியாவிலுள்ள, 25 ஆறுகள் மாசடைந்துள்ளன ; 486 ஆறுகள் சுத்தமாக உள்ளன

புத்ராஜெயா, ஜூன் 6 – நாடு முழுவதும், சுற்றுசூழல் துறையால் கண்காணிக்கப்படும் மொத்தம் 672 ஆறுகளில், 25 ஆறுகள் பல்வேறு நடவடிக்கைகளால் மாசடைந்துள்ளதால், மூன்று அல்லது நான்காம் பிரிவுகளில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் உட்பட கெடா, பினாங்கு, சிலாங்கூர், ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் அந்த மாசுபட்ட நதிகள் கண்டறியப்பட்டுள்ள வேளை ; அவற்றின் நீரின் தரம் 35 முதல் 58 வரையில் மதிப்பிடப்பட்டுள்ளதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடில்லா யூசோப் தெரிவித்தார்.

நாட்டில், சுற்றுசூழல் துறையால் கண்காணிக்கப்படும் 672 ஆறுகளில், 72 விழுக்காடு அல்லது 486 ஆறுகள் சுத்தமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

24 விழுக்காடு அல்லது 161 ஆறுகள் மிதமான நிலையில் இருக்கும் வேளை ; எஞ்சிய நான்கு விழுக்காடு அல்லது 25 ஆறுகள் மாசடைந்துள்ளதை, பாடில்லா சுட்டிக்காட்டினார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற, தேசிய நதி நீர் தரம் மோசமடைவதை நிவர்த்தி செய்யும் சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு பின்னர், பாடில்லா செய்தியாளர்களிடம் இவ்விவரங்களை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!