இந்தியா, ஆகஸ்ட் 20 – மலேசியாவும் இந்தியாவும் இன்று 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிநாட்டு தொழிலார்களின் வேலைவாய்ப்பு, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பம், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியிருக்கின்றன.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், பிரதமர் அன்வாரும் இருதரப்பு அதிகாரிகளின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
பிரதமருடன், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசன் (Datuk Seri Mohamad Hasan), முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் (Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz), சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் (Datuk Seri Tiong King Sing) மற்றும் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ (Gobind Singh Deo) ஆகியோரும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.