கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கியதில் காணாமல் போன இந்தியப் பிரஜையைத் தேடி மீட்கும் பணிகளுக்கு உதவ, சிங்கப்பூர் கழிவு மேலாண்மை நிறுவனமான Jetters Incz Pte Ltd முன்வந்துள்ளது.
தேடி மீட்கும் பணிகளுக்கு flushing முறையும் பயன்படுத்துவதாக அறிகிறோம்; அதில் எங்கள் நிறுவனம் கைத்தேர்ந்தது என்பதால், தன்னார்வ அடிப்படையில் உதவிக் கரம் நீட்ட முன்வருகிறோம் என அறிக்கையொன்றில் அது கூறியது.
எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பத்துடன், சிக்கலான வடிகால் அமைப்புகளைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றலும் உள்ளது.
இது, தற்போதையச் சூழலில் தேடல் மீட்புப் பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்குமென நம்புவதாக, அந்நிறுவனம் கூறிற்று.
கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக அப்பணிகளைச் செய்துக் கொடுக்க தயாரென்றும் Jetters Incz தெரிவித்தது.
48 வயது விஜயலட்சுமியைத் தேடி மீட்கும் பணிகள் இன்று நான்காவது நாளாகத் தொடருகின்றன.
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் இதுவரை அவரின் ஒரு ஜோடி செருப்பு மட்டுமே சிக்கியுள்ளது.