Latestமலேசியா

மாட்டுத் தொழுவத்தில் 182,000 ரிங்கிட் போதைப் பொருளுடன் பெண் கைது

பாசீர் பூத்தே , ஜூலை 9 – பாசீர் பூத்தே , Cherang Ruku வில் Kampung Lembah விலுள்ள மாட்டுத் தொழுவத்தில் 182,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நண்பல் மணி 2.10 அளவில் 37 வயதுடைய அந்த பெண்ணை பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து ஹெரொய்ன் கலவையைக் கொண்ட 400 கிரேம் நீர் கொண்ட 80 போத்தல்கள் மற்றும் பல்வேறு போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan சைசூல் ரிசால் ஷக்கரியா ( Zaizul Rizal Zakaria ) தெரிவித்தார். அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த பெண் விசாரணைக்கு உதவும் பொருட்டு ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டுளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!