Latestமலேசியா

மாரான் செல்லும் வழியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்; 4 சிறார்கள் உட்பட12 பேர் காயம்

குவாந்தான், செப்டம்பர்-30, பஹாங், மாரான் செல்லும் வழியில் Jalan Felda Jengka 4 சாலையில் 2 கார்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில், 4 சிறார்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

Honda City கார்கள் 3 ஆடவர்களும் 2 பெண்களும் இருந்த வேளை, Perodua Bezza காரில் ஓர் ஆடவர், 2 பெண்கள், 4 சிறார்கள் இருந்தனர்.

Honda City காருக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை தீயணைப்பு மீட்புத் துறையினர் வெளியே கொண்டு வந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இரு கார்களும் நேருக்கு நேர் மோதி அவற்றின் முன்பகுதிகள் நொறுங்கிபோன புகைப்படங்கள் முன்னதாக வைரலாகியிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!