Latestமலேசியா

மின்சார வாகனங்களுக்கான LKM கட்டண விகிதம் ; 2026 ஜனவரி அமலுக்கு வருகிறது

புத்ராஜெயா, ஜூன் 4 – மின்சார வாகனங்களுக்கான, LKM எனப்படும் மோட்டார் வாகன உரிம கட்டண விகிதம், அவற்றின் சக்தி அல்லது ஆற்றலை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும்.

2026-ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் தேதி முதல், அந்த கட்டண விகிதம் அமலுக்கு வருமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

புதிய கட்டண விகிதம் தற்போதுள்ள கட்டண விகிதத்தை காட்டிலும் 85 விழுக்காடு குறைவாகும். மின்சார வாகனங்களை பயன்படுத்துவதற்கு, பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மின்சார வாகனங்களுக்கான கட்ட விகிதம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வுச் செய்யப்படும்.

மின்சார வாகன பயன்பாட்டின் செயல்திறன் எட்டப்பட்டிருப்பதை உறுதிச் செய்யவும், அரசாங்க வருவாயில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை கண்காணிக்கவும் ஏதுவாக, அந்த மறுஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென லோக் தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!