பெய்ஜிங், ஏப்ரல்-29, சீனாவில், சமையலறையில் இருந்த Induction Cooker அடுப்பை தவறுதலாகத் தட்டி on செய்து, ஒரு வீடே தீப்பிடிக்க அந்த வீட்டின் செல்லப் பூனை காரணமாகியிருக்கிறது.
தனது எஜமானரான பெண் வெளியே Mahjong விளையாடிக் கொண்டிருந்த போது, Jingoudiao எனும் பெயர் கொண்ட
அப்பூனை அவ்வேலையைப் பார்த்திருக்கிறது.
எனினும் அது அதிர்ஷ்டவசமாக தீயில் இருந்து தப்பிய நிலையில், வீடு தீப்பற்றியதில் ஏற்பட்ட மொத்த சேதாரம் 14,000 அமெரிக்க டாலர் என மதிப்பிடப்படுகிறது.
என்றாலும் பூனை மீது அப்பெண் கோபமேதும் கொள்ளாமல் இயல்பாக எடுத்துக் கொண்ட அதன் உரிமையாளர், அப்பூனைக்குச் செல்ல தண்டனையாக தனது சமூக ஊடக நேரலையில் கட்டாயப்படுத்தி அதன் முகத்தைக் காண்பித்து, தனது Douyin சமூக ஊடகக் கணக்கையும் “Sichuan-னின் மிக மோசமான பூனை”, என அவர் பெயர் மாற்றி அதன் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார்.