கோலாலம்பூர், மே 10 – 1.25 மில்லியன் ரிங்கிட் மிரட்டி பணம் பறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ACP நிலையிலான துணை கமிஷனர் ஒருவர் உட்பட கைது செய்யப்பட்ட ஏழு போலீஸ் அதிகாரிகள் சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு குற்றங்கள் சட்டத்தின் கீழ் ஜூன் 5 ஆம்தேதி வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் . மே 9 ஆம்தேதி வியாழக்கிழமை தொடங்கி 32 முதல் 50 வயதுடைய அந்த சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ Razarudin Husain தெரிவித்தார்.
தங்களது சொந்த நன்மைக்காக அந்த கும்பல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். புதிய ஆதாரங்கள் இருக்குமானால் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக Razarudin இன்று கூறினார். தடுத்துவைக்கப்பட்டவர்களில் ஒரு துணை superintendent, இரண்டு inspectors கள், ஒரு sergeant, மூன்று lance Corporal கள் மற்றும் சரணடைந்த பின்னர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட மற்றொரு 34 வயதுடைய inspectorரும் அடங்குவார் என அவர் தெரிவித்தார்.