
கோலாலம்பூர், ஏப்-29-இன்று காலை 6 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 14 பகுதிகளும், சபாவில் இரண்டு பகுதிகளும், சரவாக்கில் ஒரு பகுதியும் 1-ஆவது நிலை அளவில் வெப்பமான காலநிலையைப் பதிவு செய்துள்ளன.
பெர்லிஸ் , கெடாவில் உள்ள குபாங் பாசு, பென்டாங், கோத்தா ஸ்டார் , படாங் தெராப் , பேராவில் கோலா கங்சார், உலு பேராக், கிளந்தானில் ஜெலி, பாசிர் மாஸ், தானா மேரா, மாச்சாங் , கோலாலம்பூர் , சிலாங்கூரில் கோம்பாக் மற்றும் சுபாங் ஆகிய இடங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனதாக வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் சபாவில் பியூபோர்ட் மற்றும் தெலுபிட் , சரவாக்கில் உள்ள லிம்பாங் ஆகியவையும் மோசமான வெப்பநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு தினசரி கூடியபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால் 1 ஆவது நிலை அபாயக் கட்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது என வானிலைத்துறை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.



