Latestமலேசியா

முதலீட்டாளர்களிடம் 20 பில்லியன் ரிங்கிட் மோசடி; டத்தோ ஸ்ரீக்கு போலீசார் வலைவீச்சு

கோலாலம்பூர், மே 20 – பசுமை தொழிற்நுட்பம், biodiesel, nano  தொழிற்நுட்பம்  மற்றும் கட்டுமானம் போன்ற திட்டங்களில் முதலீட்டாளர்களை   20 பில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததன் தொடர்பில் டத்தோஸ்ரீ பிரதமுகர் ஒருவரை போலீசார் தேடுவருகின்றனர்.   தலைமறைவான அந்த முக்கிய சந்தேகப் பேர்வழி மீதான விசாரணை அறிக்கை முழுமையடைந்துவிட்டதால் அவரை  தற்போது தேடப்படுவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்டட  போலீஸ்   தலைவர்  துணை கமிஷனர்  Shahrulnizam Ja’afar தெரிவித்தார். அந்த சந்தேக நபர் குறித்த தகவல்கள் நடவடிக்கை குழுவிடம்   வழங்கிவிட்டதால் அவரை தேடி  கைது செய்யும்படி  பணிக்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்தார். 

 இந்த விவகாரத்தில்  பெண் விரிவுரையாளர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால்  டத்தோஸ்ரீ பிரமுகர் கைது செய்யப்பட்ட பின்னரே அவரது நிலைமை குறித்து தெரியவரும் . முக்கிய சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்ட பின்னர்  விசாரணை அறிக்கை  அரசாங்க  துணை வழக்கறிஞரான  DPP அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என  Shahrulnizam  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!