Latestமலேசியா

முன்னாள் அம்னோ உறுப்பினர்களின் ஆதரவை பெரிக்காத்தான் நேசனல் பெற்று வருகிறது – முஹிடின்

கோலாலம்பூர் – மே 7 – முன்னாள் அம்னோ உறுப்பினர்களின் ஆதரவை பெரிக்காத்தான நேசனல் பெற்றுவருவதாக அந்த கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ Muhyiddin Yassin தெரிவித்திருக்கிறார்.
DAP யுடன் ஒத்துழைப்பது என அம்னோ முடிவு செய்ததால் அதன் உண்மையான போராட்டத்திலிருந்து அம்னோ விலகிச் சென்று விட்டதை அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் உணர்ந்துவிட்டதே இதற்கான காரணம் என அவர் கூறினார். அவர்களில் பலர் பெரிக்காத்தான் நேசனலுக்கு ஆதரவு வழங்குவதற்கு நேரம் வந்துவிட்டதாக கருதுவதால் கோலா குபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனுலுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாக
Ampang Pecah வில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் உரையாற்றியபோது
Muhyiddin தெரிவித்தார்.

கோலா குபு பாரு சட்டமன்ற தேர்தலில் பெரிக்காத்தான் நேசனலுக்கான புதிய ஆதரவு அலையை உணர முடிவதாகவும் இந்த அலை 16 ஆவது பொதுத் தேர்தல்வரை இருக்கும் என அவர் கூறினார். கடந்த ஆண்டு பொதுத் தேர்தலின்போது கோலாகுபுபாருவில் மலாய்க்கார வாக்காளர்கள் 47 விழுக்காட்டினர் இருந்தாலும் பலர் வாக்களிக்க வரவில்லை. சீன வாக்காளர்கள் 30 விழுக்காட்டை கொண்டிருந்தபோதிலும் அவர்களில் 90 விழுக்காட்டினர் வாக்களின்பின் முக்கியத்துவத்தை அறிந்து வாக்களித்தனர். இப்போது மலாய்க்காரர்கள் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டுள்ளதால் கோலா குபு பாருவில் இதற்கான அறிகுறி தென்படுவதாகவும் எதிர்வரும் பொதும் தேர்தல் பெரிக்காத்தான் நேசனலுக்கு இது பெரிய வெற்றியை தேடிக் கொடுக்கும என Muhyiddin நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!