Latestமலேசியா

மோட்டார் சைக்கிளோட்டிக் கொண்டே போலி கைத்துப்பாக்கியைக் காட்டி வைரலான ஆடவன் கைது

குவாலா திரங்கானு, ஜூலை-18, சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிக் கொண்டே போலி கைத்துப்பாக்கியை ஒத்திருக்கும் பொருளைக் காட்டியதன் பேரில், குவாலா திரங்கானுவில் ஓர் ஆடவர் கைதாகியுள்ளார்.

உணவகப் பணியாளரான 26 வயது அந்நபர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜாலான் சுல்தான் மஹ்முட்டில் உள்ள கடையொன்றில் வைத்து கைதுச் செய்யப்பட்டார்.

முன்னதாக facebook-கில் வைரலான வீடியோ தொடர்பில் பொது மக்கள் கொடுத்த புகார் அடிப்படையில் மாவட்ட போலீஸ் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக, குவாலா திரங்கானு போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஸ்லி மொஹமட் நூர் (Azli Mohd Noor) தெரிவித்தார்.

கைதான நபரிடமிருந்து கறுப்பு நிற போலி கைத்துப்பாக்கியும், Honda C70 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குப்பைத் தொட்டியிலிருந்து அந்த போலி கைத்துப்பாக்கியைக் கண்டெடுத்ததாக அவ்வாடவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

சபாவைச் சேர்ந்த அந்நபர், சம்பவத்தின் போது போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை தொடர்பில் ஏற்கனவே குற்றப்பதிவைக் கொண்டுள்ள அவ்வாடவர், 1960 சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!