குவாலா லங்காட், ஜனவரி-25, குவாலா லங்காட், மோரிப் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தோனீசியர் ஒருவர் கொல்லப்பட்ட வேளை, சக நாட்டவர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக் கிழமை அதிகாலை 3 மணிக்கு, கடல் மார்க்க ரோந்துப் படையினர் பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்குரிய வகையிலிருந்த படகொன்றை கண்டனர்.
கள்ளக்குடியேறிகளை ஏற்றிக் கொண்டு நாட்டின் கரையோரப் பகுதியிலிருந்து அப்படகு வெளியேற முயன்றதாக நம்பப்படுகிறது.
விடியற்காலை இருடென்பதால் முதலில் எதுவும் தெரியவில்லை.
விடிந்த பிறகு,படகில் ஒருவர் இறந்துகிடந்தார்; இன்னொருவர் படுகாயங்களுடன் கிடந்தார்.
காயமடைந்தவர்கள் கிள்ளான் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கான அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயமடைந்த மேலும் மூவர் கரைக்கு நீந்தி வந்து தப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வேளையில், போலீஸ் நடத்திய விசாரணையில், செர்டாங் மருத்துவமனையில் நேற்று முந்தினம் அதிகாலை துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்காக சிகிச்சைப் பெற வந்தவர்களுக்கும், இந்த மோரிப் துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பிருக்கலாமென நம்பப்படுகிறது.
இந்நிலையில் அந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுயேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) கூறினார்.
முன்னதாக 3 இந்தோனேசிய ஆடவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் செர்டாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்திருக்கின்றனர்.
Toyota Vios காரில் வந்த மூவரில் இருவர் ஈரமான ஆடைகளை அணிந்திருந்தனர்; மூன்றாவது நபர் boxer மட்டுமே அணிந்திருந்தார்.
ஒருவருக்கும் அடையாள ஆவணங்கள் இல்லை என தகவல்கள் வெளியாகியிருந்தன.