கோலாலம்பூர், நவம்பர் 15 – தீபத்திருநாள் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்ட போதிலும், நாடு முழுவதும் அதற்கான கொண்டாட்டங்களும் வறியவர்களுக்கு உதவிகள் நல்குவதும் இன்னமும் தொடர்ந்து வருகிறது.
அவ்வகையில், நேற்று ம.இ.கா தேசிய தலைவருடன் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தேறியது.
தற்போதைய சூழ்நிலையில், தீபாவளிக்குப் பின்தான் இந்தியர்கள் உண்மையாகவே சிரமப்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
இதனை முன்னிறுத்தியே, ம.இ.கா தீபாவளி முடிந்து அன்பளிப்புகளை வழங்குவதாக, நிகழ்ச்சிக்குத் தலைமை தாக்கிய ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இந்நேரத்தில் வழங்கப்படும் உதவிகள்தான் மக்களுக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.
Interview
நேற்று, சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேச மாநிலங்களிலுள்ள B40 பிரிவு சேர்ந்த 200 ம.இ.கா உறுப்பினர்களுக்குத் தீபாவளி உதவிப் பொருட்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலங்களிலும் ம.இ.கா மக்களுக்குத் தீபாவளி அன்பளிப்புகள் வழங்குவது வழக்கமே.
ஆனால், இதுவே முதல்முறை மக்களின் நிலைப்பாட்டை அறிந்து தீபாவளிக்குப் பின் தீபத்திருநாள் அன்பளிப்பு வழங்குகிறோம். இம்முயற்சி இனி வரும் காலமும் தொடரும் என்றார் ம.இ.காவின் ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம்.
Interview
Closing
ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏறக்குறைய 300 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.