
ஜோகூர் பாரு, மே 18 – முன்னாள் PKR துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி (Rafizi Ramli) மற்றும் முன்னாள் துணை தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (Nik Nazmi Nik Ahmad) ஆகியோர் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கட்சி பாண்டுக்கு (Bond) இன்னும் கட்டுப்பட்டுள்ளதாக PKR தெரிவித்துள்ளது.
PKR பொதுச் செயலாளர் டாக்டர் ஃபுஸியா சாலே (Fuziah Salleh) கூறுகையில், இருவரும் Malaysian United Party (MUP) என்ற கட்சியில் ஏற்கனவே இணைந்ததாக இணையதள ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அவர்கள் முதலில் கட்சி மாறியதாக கருதப்படலாம் என்றும் அவர் கூறினார்.
இதனால், கட்சி விதிகளின்படி அவர்கள் ‘Bond’ உடன்படிக்கைக்கு இன்னும் உட்பட்டவர்களாக இருக்கலாம் என PKR விளக்கியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் சட்ட ஆலோசகர்கள் மேல் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் நாளை நடைபெறவுள்ள PKR கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், தேவையானால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரஃபிசி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை முதலில் காலி செய்ததால் கட்சி பாண்டு பொருந்தாது என்றும், பாண்டு விதி கட்சியை விட்டு வேறு கட்சியில் சேரும்போது மட்டுமே அமலாகும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.



