Latestமலேசியா

புதிய ராணுவ ஆட்சேர்ப்பில் விதிமுறைகள் தளர்வு: வயது, உயர வரம்பில் மாற்றம்

பெட்டாலிங் ஜெயா, மே 18 – மலேசிய ராணுவப்படை, புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்கும் நோக்கில் ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் தளர்வு வழங்கியுள்ளது.

ராணுவப்படை தளபதியான ஜெனரல் அசான் முகமட் ஒத்மான் (Azhan Md Othman) கூறுகையில், முன்பு 27 வயதாக இருந்த அதிகபட்ச வயது வரம்பு தற்போது 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடி அணிபவர்களும் இனி சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அதேவேளை, முன்பு 162 செண்டி மீட்டராக இருந்த குறைந்தபட்ச உயரம் தற்போது 157 செண்டி மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. BMI அளவுகோலும் சேவைப் பிரிவுக்கு ஏற்ப 18 முதல் 27.9 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகளால் ஒவ்வொரு தேர்விலும் 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை இளைஞர்கள் அதிகமாக பயிற்சிக்கு வருவதாக அவர் கூறினார். எனினும், உறுப்பினர்களின் தரத்தில் எந்த குறைப்பும் இல்லை என்றும், தொழில்நுட்ப திறன் மற்றும் திறமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!