லிப்பிஸ், ஜூன்-27 – பஹாங், லிப்பிசில் வீட்டருகே இருந்து ஆற்றில் விழுந்து 1 வயது 10 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நேற்று மாலை Pos Lenjang, Kampung Simoi Lama-வில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்றில் விழுந்து, நீரில் அவள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் இஸ்மாயில் மான் ( Ismail Man ) சொன்னார்.
சுயநினைவற்ற நிலையில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட அக்குழந்தை, நீரில் மூழ்கி உயிரிழந்ததை லிப்பிஸ் மருத்துவமனை உறுதிபடுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் லிப்பிஸ் மாவட்ட போலீசை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.