
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6- முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஒருவர், 10 பேரடங்கிய மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பெட்டாலிங் ஜெயா அருகேயுள்ள அவரது வீடு புகுந்து அத்தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் முகத்திலும் கைகளிலும் அந்நபர் காயங்களுக்கு ஆளானார்.
முன்னதாக 2 பாதுகாவலர்களைக் கட்டிப் போட்டு விட்டு அக்கும்பல் வீட்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. சாட்சியை தாக்கி விட்டு, “ஹீரோவாக முயற்சிக்க வேண்டாம், வீட்டிலேயே இரு” என அந்த சாட்சியை அக்கும்பல் மிரட்டி விட்டும் சென்றுள்ளது.
இச்சம்பவத்தை உறுதிபடுத்திய பெட்டாலிங் ஜெயா போலீஸ், இடைப்பட்ட காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென்றது.
இவ்வேளையில், அவ்வழக்கு ஆகஸ்ட் 19-ல் விசாரணைக்கு வரும் போது, இத்தாக்குதல் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என, அரசு தரப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
DAP தேசியத் தலைவருமான குவான் எங், பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.