பெட்டாலிங் ஜெயா, ஜூலை-13 – சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உடற்பயிற்சி மையத்தில் அறிமுகமான வங்காளதேச ஆடவரை வீட்டுக்கு வரவழைத்து ஓரினப் புணர்ச்சிக்குக் கட்டாயப்படுத்திய உள்ளூர் ஆடவன் கைதாகியுள்ளான்.
37 வயது அந்நபர் நேற்று காலை பேராக் ஈப்போவில் கைதானதை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஷாருல் நிசாம் ஜாஃபார் (Shahrulnizam Jaafar) உறுதிபடுத்தினார்.
சந்தேக நபர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
வீட்டுக்கு வா, பேசிக் கொண்டிருக்கலாம் என்றழைத்த நண்பரின் பேச்சை நம்பி போன போதே, 25 வயது அந்த வங்காளதேச இளைஞர் ஓரினப்புணர்ச்சிக்கு ஆளாகியதாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இயற்கைக்கு மாறான உறவை குற்றமாக வகைப்படுத்தும் குற்றவியல் சட்டத்தின் 377B பிரிவின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.