வயநாடு, ஆகஸ்ட்-5, இந்தியா, கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் தனது எஐமானரைத் தொலைத்த நாய், 6 நாட்களுக்குப் பிறகு அவருடன் ஒன்று சேர்ந்துள்ளது.
6 நாட்களாக கவலை தோய்ந்த முகத்துடனும் கலக்கத்துடனும் நிலச்சரிவு பகுதிகளை அந்நாய் சுற்றி வந்தது.
எஜமானராக இருக்க மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் வருவோர் போவோரை அது ஏக்கத்துடன் நோட்டமிட்டது.
நாய் தனது குட்டிகளைத் தொலைத்து விட்டு தான் தேடுகிறதோ என பலரும் எண்ணியிருந்தனர்.
இந்நிலையில் அதன் காத்திருப்பு வீண்போகவில்லை.
ஒருவழியாக 6 நாட்களுக்குப் பிறகு தனது எஜமானரான பெண்ணை அது கண்டுகொண்டது.
பார்த்தவுடன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து அப்பெண்ணின் கால்களில் அது ஒட்டிக் கொண்டது.
எஜமானியும் கட்டியணைத்துக் கொள்ள, நாய் வாஞ்சையுடன் அவரை முத்தமிட்டது.
உரிமையாளருடன் நாய் மீண்டும் சேர்ந்த வீடியோ வைரலாகி பார்ப்போரின் மனதை நெகிழ வைக்கிறது.