
கோத்தா திங்கி, பிப்ரவரி-6-ஜோகூர், கோத்தா திங்கியில் காசநோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், 6 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் பள்ளிகள் மூடப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை 804 நெருங்கிய தொடர்புகள் பரிசோதிக்கப்பட்டதில் 33 பேருக்கு காசநோய் உறுதிச் செய்யப்பட்டது.
ஒரு மரணம் பதிவாகியிருந்தாலும் அது காசநோயுடன் தொடர்பில்லாதது.
இந்நிலையில், பள்ளிகளில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் நிதானமாக இருக்கவும், தவறான தகவல்களை பரப்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



