
கோலாலம்பூர், ஜூன்-30-வாட்சப் செயலியைப் பயன்படுத்தும் பில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தியாக, உங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மையை மேம்படுத்த வாட்சப் நிறுவனம் ஒரு புதிய அதிரடி மாற்றத்தைக் கொண்டுவருகிறது.
ஆம், இனிமேல் வாட்சப்பில் ஒவ்வொரு பயனருக்கும் தனித்துவமான _username_ அதாவது ‘பயனர் பெயர்’ முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதன் தாய் நிறுவனமான Meta அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை, ஒரு புதிய நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றால், நம்முடைய தொலைபேசி எண்ணை கட்டாயம் பகிர வேண்டிய நிலை இருந்தது.
ஆனால், இப்புதிய புதுப்பித்தல் (update) மூலம், உங்கள் கைப்பேசி எண்ணை மறைத்து வைத்துவிட்டு, _username_மை மட்டுமே பயன்படுத்தி மற்றவர்களுடன் _chat_ செய்ய முடியும்.
குறிப்பாக, பெரிய வாட்சப் குழுக்களில் நீங்கள் இணையும்போது உங்கள் எண் யாருக்கும் தெரியாது.
யாரும் உங்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்பதால், விளம்பர மற்றும் தேவையில்லாத அல்லது அனாமதேய _spam_ செய்திகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
உலகெங்கிலும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு இந்த அம்சம் அடுத்த சில மாதங்களில் படிப்படியாகக் கிடைக்கவுள்ளது.
உங்களுக்கான பிரத்யேக _username_மை உடனே முன்பதிவு செய்ய, உங்கள் வாட்சப் செயலியில் வரும் _notification_ அறிவிப்பை கவனித்து வாருங்கள்.



