
கோலாலம்பூர், ஜூன்-30-கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 465 பேர் மரணமடைந்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 393 ஆண்களும், 60 பெண்களும், 12 குழந்தைகளும் அடங்குவர்.
தேசிய இன வாரியாகப் பார்க்கும்போது, பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 222 பேரும், இந்தோனேசியர்கள் 109 பேரும், மியன்மார் நாட்டவர் 61 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும், இந்த 5 ஆண்டுகளில் தடுப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்ட 349,000-க்கும் ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளுடன் ஒப்பிடுகையில், இந்த இறப்பு விகிதம் 0.13% மட்டுமே என அமைச்சர் குறிப்பிட்டார்.
_sepsis_ எனப்படும் நுண்ணுயிர் தொற்று, சுவாச நோய்கள், மாரடைப்பு மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஆகியவை இந்த இறப்புகளுக்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
தற்பொழுது தடுப்பு முகாம்களில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் சைஃபுடின் தெரிவித்தார்.



