
கோலாலம்பூர், அக்டோபர்-13,
இங்கிலாந்தில் தாக்குதலுக்கு உள்ளான பிறகு, “வாழ்க்கையே முக்கியம், பொருள் அல்ல” என பிரபல மலேசியத் தொழிலதிபர் டத்தோ Dr வினோத் சேகர் நினைவூட்டியுள்ளார்.
அவர் அண்மையில் Oxford-டில் தனது மகளை சந்திக்கச் சென்றபோது, இருவர் திடீரென நெஞ்சில் தாக்கி, அவரது கை கடிகாரத்தை பறித்துச் சென்றனர்.
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருந்துகளை உட்கொண்டிருந்ததால்அவரால் எதிர்த்து போராட முடியாமல் போனது; என்றாலும் அவரின் மனைவி தைரியமாக குற்றவாளிகளை எதிர்கொண்டு விரட்டினார்.
ஒருவேளை Dr வினோத் எதிர்த்து போராடியிருந்தால் அதுவே அவரின் உயிருக்கு ஆபத்தாய் முடிந்திருக்கும் என போலீஸார் கூறினர்.
இந்நிலையில் அந்நியர்களின் உதவியும், மனைவியின் தைரியமும் மனிதநேயத்தின் பெருமையை மீண்டும் நினைவூட்டியதாக அவர் நெகிழ்ந்தார்.
இந்த அனுபவத்துக்குப் பிறகு, Dr வினோத் ஃபேஸ்புக் பதிவில் பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, வெளிநாடு செல்லும் போதோ அல்லது பொது இடங்களிலோ விலையுயர்ந்த பொருட்களை வெளியில் தெரியும்படி அணிய வேண்டாம் என்று…
“வாழ்க்கை, பொருளை விட மேலானது…பொருட்களை மீண்டும் வாங்கலாம்; ஆனால் வாழ்க்கையை மீண்டும் பெற முடியாது” என மிகப் பெரிய செய்தியுடன் தனது பதிவை அவர் முடித்துள்ளார்.