Latestமலேசியா

பண்டிகைக் காலங்களில் தேர்தல் வேண்டாம்; தேர்தல் ஆணையத்திற்கு முருகையா கோரிக்கை

மலாக்கா, அக்டோபர்-31 – நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தையும் மக்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில், முக்கியப் பண்டிகைக் காலங்களில் தேர்தல்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையமான SPR-ரை ம.இ.கா வலியுறுத்தியுள்ளது.

மலாக்கா மாநிலத் தேர்தலில் காடேக் தொகுதியில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் ம.இ.கா வேட்பாளர் நடராஜாவின் இன்றைய வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு, ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா இதனைத் தெரிவித்தார்.

இந்தியச் சமூகம் அடுத்த வாரம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வரும் வேளையில் மலாக்கா மாநிலத் தேர்தல் நடத்தப்படுவது கொண்டாட்டங்களைப் பாதிப்பதோடு, வாக்காளர்களுக்கும் கட்சிப் பணியாளர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஹரி ராயா, சீனப் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் என அனைத்துச் சமூகங்களின் பண்டிகைகளுக்கும் சமமான மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எனவே, பொது மக்கள் தங்களின் மதக் கடமைகளுக்கும் ஜனநாயகக் கடமைகளுக்கும் இடையே சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, பண்டிகைக் கால அட்டவணைகளைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகளை முடிவெடுக்குமாறு SPR-ரை முருகையா கேட்டுக் கொண்டார்.

நவம்பர் 14-ஆம் தேதி தான் வாக்களிப்பு என்றாலும், இன்று தொடங்கி 2 வாரங்களுக்கு அதாவது தீபாவளி சமயத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!