
புத்ராஜெயா, ஆகஸ்ட்-13- வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் அரச உத்தரவு இருப்பதை உறுதிச் செய்து, அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தக் கோரும் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதில், தேசிய சட்டத் துறைத் தலைவர் தோல்விக் கண்டுள்ளார்.
சட்டத் துறைத் தலைவரின் மனுவை, மலாயா தலைமை நீதிபதி தான் ஸ்ரீ ஹஸ்னா மொஹமட் ஹாஷிம் தலைமையிலான கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நஜீப்பின் விண்ணப்பம் உயர் நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு, புதிய நீதிபதியின் முன்னிலையில் அது செவிமெடுக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
இது நஜீப்பிக்கு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
42 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய SRC International ஊழல் வழக்கில் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை நஜீப் வீட்டில் கழிக்க ஏதுவாக, 16-ஆவது மாமன்னர் அந்த கூடுதல் உத்தரவைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.