புத்ரா ஜெயா , மே 5 – தற்போது பல மாநிலங்களில் இருந்துவரும் கடுமையான வெப்ப நிலை மேலும் மோசமடைந்தால் பள்ளிகளை மூடுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு அறிவிக்கக்கூடும். இப்படியொரு நடவடிக்கை அவசியமா என்பது குறித்து சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் Muhammad Radzi Abu Hassan தீவிரமாக ஆராயக்கூடும் என்பதோடு இந்த விவகாரத்தில் விவேகமான முடிவு எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.
வெப்ப நிலை குறித்து பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இப்போதைக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை 35 டிகிரி
செல்சியஸ் இருந்தால் பள்ளி மாணவர்களுக்கான வெளி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற நிலையை அமைச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
மாணவர்களுக்கான வெளி நடவடிக்கைகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது. விரும்பத்தகாக அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த இது மிகவும் அவசியம் என Dzulkifly கூறினார். Kelantan, Perlis மற்றும் Kedahவில் இருந்துவரும் கடுமையான வெப்ப நிலை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.