Latestஉலகம்

இந்தோனேசியாவில் மாணவர்களுக்கான உணவுத் திட்டம் சர்ச்சையானது; தற்காலிகமாக நிறுத்தக்கோரும் கோரிக்கைகளும் அதிகரித்து வருகின்றன

ஜகார்த்தா, அக் 3 – இந்தோனேசிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள்  மதிய உணவு திட்டத்தினால்  நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் இலவச முதன்மைத் திட்டம்  சர்ச்சையானதோடு அதனை தற்காலிகமாக நிறுத்தக்கோரும் கோரிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.  

Java தீவின் மேற்கு Bandung மாவட்டத்தில் கடந்த வாரம் நச்சுணவு சம்பவம் அதிகரித்தால் , சுவாசக் கோளாறு, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 1,300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதார கிளினிக்கிற்கு  விரைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தை ஊட்டச்சத்து நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாக இந்தோனேசிய அதிபர் Prabowo  Subiantoவின்  முயற்சியில்  மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட  போதிலும் தற்போது அரசாங்கம்  பல பள்ளிகளில்   சமையலறைகளின்  நடவடிக்கைகையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

அதிபரின் மதிய உணவை நிறுத்திவிட்டு  அதனை ரொக்கப் பணம் வழங்கும் திட்டமாக மாற்ற  வேண்டும் என பலர்  கருத்துரைத்துள்ளனர்.

 பள்ளியில் சமைக்கப்படும் உணவு வழங்குவதைவிட வீட்டிலிருந்து கொண்டுச் செல்லப்படும் உணவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை பலர் வெளியிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!