
புத்ராஜெயா, அக்டோபர் 24 –
இவ்வாண்டு SPM தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள், இயற்கை பேரிடர்கள் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக தங்களின் பள்ளி நிர்வாகம் அல்லது மாநிலக் கல்வித் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு (MOE) அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய காலக்கட்டங்களில் இயற்கை பேரிடர் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களின் பாதுகாப்பு நலனைக் கருதி கல்வி அமைச்சு இம்முடிவினை எடுத்துள்ளது.
மேலும் கல்வி அமைச்சு தேசிய பேரிடர் மேலாண்மை நிர்வாகம் (NADMA), மலேசிய வானிலைத் துறை, சுகாதார அமைச்சு, காவல்துறையினர், ஆயுதப்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, சிவில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முகமைகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது.
SPM 2025 தேர்வுகள் சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற தேவையான அனைத்து தயார்பாடுகள் மற்றும் நிலையான செயல்முறைகள் (SOP) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எந்த அவசர நிலை ஏற்பட்டாலும் அதனைச் சமாளிக்க அமைச்சு எப்போதும் தயாராக உள்ளது என்றும் அனைத்து SPM மாணவர்களும் சீரான மற்றும் பாதுகாப்பான சூழலில் தேர்வுகளை எழுத வேண்டும் எனவும் அமைச்சு கேட்டுக்கொண்டது.



