Latestமலேசியா

வேலையிலிருந்து நீக்கியதால் ஆத்திரம்; பழைய முதலாளியின் சொகுசுக் காரைச் சேதப்படுத்தி வஞ்சம் தீர்த்த ஆடவர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் -31,வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் பழைய முதலாளியின் ஆடம்பரக் காரைச் சேதப்படுத்திய ஆடவர் கோலாலம்பூரில் கைதாகியுள்ளார்.

பாதுகாவலர் சேவை வழங்கும் நிறுவனமொன்றின் உரிமையாளரது Lamborghini Urus காரே சேதமானது.

காரின் முன்பகுதி bonet மடங்கி, பக்கவாட்டு கண்ணாடி கீறப்பட்டு, முன்பகுதி கண்ணாடியும் bumper-ரும் உடைந்து போயிருந்தன.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை வாக்கில் அவர் போலீசில் புகார் செய்ததை, அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP மொஹமட் அசாம் இஸ்மாயில் (Mohd Azam Ismail) உறுதிப்படுத்தினார்.

புகார்தாரரின் மனைவிக்கு காரோட்டுநராக சந்தேக நபர் வேலை பார்த்து வந்துள்ளார்.

கைதானவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

27 வயது அந்நபர் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!