ஷா ஆலாம், ஆகஸ்ட்-12, சிலாங்கூர், ஷா ஆலாம் செக்ஷன் U11-ல் உள்ள பெரிய கால்வாயில் பெண்ணொருவரது அழுகிய சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.
மேல்சட்டை மற்றும் உள்ளாடையுடன் மட்டுமே இருந்த அச்சடலத்தைப் பொது மக்கள் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லையென ஷா ஆலாம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் (Iqbal Ibrahim) தெரிவித்தார்.
தொடக்கக் கட்ட பரிசோதனையில், அப்பெண்ணின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கக் கூடிய காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சவப்பரிசோதனைக்காக சடலம் அனுப்பப்பட்டுள்ளது.