ஹைதராபாத், ஜூலை-13 – தென்னிந்திய மாநிலம் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தயாரிக்கப்பட்ட சட்னியில் உயிருள்ள எலி நீந்திய சம்பவம் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்குக் காலை உணவாக கடலையுடன் இட்லியும் சட்னியும் தயாரிக்கப்பட்டுள்ளன.
சட்னி வைக்கப்பட்டிருந்த பானை மூடப்படாமல் இருந்ததால், அதில் உயிருள்ள எலி ஒன்று விழுந்துள்ளது.
உணவகப் பணியாளர்கள் அதை கவனிக்கவில்லை; ஆனால் மாணவர்கள் கண்ணில் அது பட்டு விட்டது.
பானையில் ஏதோ நீந்துவது போல் தெரிந்ததால் சந்தேகத்தில் உற்றுப் பார்த்த போது தான் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சட்டினியில் எலி நீந்துவதை தங்களது கைப்பேசிகளில் வீடியோ எடுத்து, அது குறித்து தங்கும் விடுதி நிர்வாகத்திடம் புகாரளித்தனர்.
ஆனால் உணவக நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியே மேற்கொள்ளப்பட்டதாம்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கவைக்கழக தங்கும் விடுதி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.