சிரம்பான், மே 15 – சுயநலத்திற்காக 12 ,000 ரிங்கிட்டை விண்ணப்பம் செய்து அதனை அங்கீகரித்ததில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் தொடர்பில் அரசு ஊழியர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்தது. 44 வயதுடைய அந்த ஆடவர் நேற்றிரவு 7 மணியளவில் நெகிரி செம்பிலான் MACC அலுவலகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். JKKR எனப்படும் கிராம பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டக் குழுவின் நிதியை அங்கீகரிப்பதில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அந்த சந்தேக நபரை விசாரணைக்கு உதவுவதற்காக ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவையும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC பெற்றுள்ளது.
Check Also
Close