Latestமலேசியா

13 நாள் குழந்தைக்கு மருத்துவமனையில் எலும்பு முறிவு; CCTV காட்சிகளை ஆய்வு செய்யும் போலீஸ்

சுங்கை பட்டாணி, மே-15-கெடா, சுங்கை பட்டாணியில், 13 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தொடை எலும்பு முறிந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை மஞ்சள் காமாலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தையின் தந்தை, மகன் பிறந்தபோது எந்த காயமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தபின் குழந்தையை பார்க்க சென்றபோது, காலில் கட்டு போடப்பட்டிருந்ததையும் பின்னர் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதையும் அறிந்ததாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையின் CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், மருத்துவ நிபுணர்களின் அறிக்கையும் காத்திருக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!