Latestமலேசியா

139 கிலோ கஞ்சா கடத்தல்: இரு ஆடவர்களுக்குத் தலா 30 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்

கோலாலம்பூர், செப்டம்பர்-30,4 ஆண்டுகளுக்கு முன்பு 139 கிலோ கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்திய குற்றத்திற்காக இரு ஆடவர்களுக்கு தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதித்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

38 வயது எஸ். மோகன் மற்றும் 28 வயது Ahmad Shamil Rashid ஆகியோருக்கு எதிராக அரசுத் தரப்பு இந்த வழக்கைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிபதி Arief Emran Arifin தீர்ப்பளித்தார்.

​இருவரின் சிறைத் தண்டனையும் அவர்கள் கைதுச் செய்யப்பட்ட நாளான 2022, மே 31-ஆம் தேதி முதல் தொடங்கும் என உத்தரவிடப்பட்டது.

​குற்றச்சாட்டின்படி, 2022-ஆம் ஆண்டு மே மாதம் பங்சாரில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில், 2 வாகனங்களுக்கு இடையே போதைப்பொருள் பைகளை மாற்றியபோது இருவரும் பிடிபட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!